தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ராஜசேகர். இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் பிலிம்சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இன்று அதிகாலை காரில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது காரின் டயர் திடீரென்று கழன்றது. இதனால் கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் ராஜசேகர் காயம் அடைந்தார்.
காரில் இருந்து அவரை போலீசார், பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அவரது மனைவியும், நடிகையுமான ஜீவிதா கூறும்போது, “கார் விபத்தில் தனது கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.