விஜய் சேதுபதி 
சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகர்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் பிரபல நடிகர், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மாலை மலர்

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ‘லாபம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் சமீபத்தில் இப்படத்தில் நடிகை தன்ஷிகா இணைந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது கலையரசன் இப்படக்குழுவினருடன் இணைந்துள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வரும் லாபம் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.