இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் `துருவ நட்சத்திரம்' படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தகவலின்படி புனித் ராஜ்குமார் மற்றும் அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.