சினிமா

சிம்பு, அதர்வா பாணியில் துல்கர் சல்மான்

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான் அடுத்த படத்தில் சிம்பு, அதர்வா பாணியில் அவருக்கு நாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

துல்கர் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் உள்ளிட்ட 4 நாயகிகள் நடித்திருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் நாயகன் துல்கர் சல்மான் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் சிம்புவின் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் 4 கதாநாயகிகளும், `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தில் அதர்வா ஜோடியாக 4 நாயகிகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகிகளுடனான காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இந்த படத்தை 'தி ரெபெக்ஸ் குரூப்' சார்பில் 'ரெபெக்ஸ் என்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் 'கேட்வே பிலிம்ஸ்' உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 'சோலோ' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றது.