படத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் `மெர்சல்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடக்கிறது.
துப்பாக்கி படம் முதல் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பைரா படம் வரை அனைத்து படங்களிலும் விஜய் ஒரு பாடலை பாடியிருந்தார். இந்நிலையில், தற்போது உருவாகி வரும் `மெர்சல்' படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.
ஆனால் அந்த ஆவல் நிறைவேறுவதில் கொஞ்சம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த `உதயா', `அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ஆனால் அந்த படங்களில் விஜய் எந்த பாட்டும் பாடவில்லை. இந்நிலையில், `மெர்சல்' படத்தில் விஜய் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. ஆனால் விஜய் இந்த படத்தில் பாடவில்லை என்றும் கூறப்படுகிறது.