சினிமா

இயக்குநர்கள் ராம் - மிஷ்கின் மோதும் `சவரக்கத்தி' ரிலீஸ் அறிவிப்பு

ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் ராம் - மிஷ்கின் நடிப்பில் உருவாகி வரும் `சவரக்கத்தி' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் `சவரக்கத்தி'. 

இயக்குநர் ராம் - பூர்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் மிஷ்கின். 

சமீபத்தில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பல ஹாலுவுட் படங்களை வெளியிட்ட க்ரைக்ஸ் சினி கிரியேஷன்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.