சாந்தனு 
சினிமா

இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்... சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்

இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என்று நடிகர் சாந்தனுவை இளம் இயக்குனர் ஒருவர் வாழ்த்தி இருக்கிறார்.

இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 'இராவண கோட்டம்' படத்தின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. இதையடுத்து படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது.

 இந்நிலையில் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, "இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்" என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.