சினிமா

ஒரு அடார் லவ் தோல்விக்கு அவர்கள் தான் காரணம் - இயக்குனர்

ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒரு அடார் லவ் இயக்குனர், படம் தோல்வியடைந்தது குறித்து காரணம் கூறியுள்ளார். #OruAdaarLove

மாலை மலர்

ஒரு அடார் லவ் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் ஒமர் ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவரும் படத்தில் நடித்த மற்றொரு நடிகையான நூரின் ஷெரிப்பும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஒமர், 

“இந்தப் படத்தை தொடங்கும் போது ரோ‌ஷனும், பிரியாவும் கதையைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருந்தனர். எனக்கும் அது தான் தேவையானதாக இருந்தது. திடீரென அவர்களுக்கு கிடைத்த பிரபலம் நடிகர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியது. பிரியாவும், ரோ‌ஷனும் கதையை மாற்ற முற்பட்டனர். பலரும் அவர்களுக்கு அறிவுரை கூறியபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை” என்று கூறினார். 

பிரியா காட்சிகளை மாற்றியதால் நூரின் பங்குபெறும் காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அவர் ஏற்படுத்திய மாற்றம் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று ஒமர் கூறியுள்ளார்.