சினிமா

இருட்டு அறையில் முரட்டு குத்து ஹாலிவுட் படத்தின் காப்பியா? இயக்குனர் விளக்கம்

கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீசர் ஹாலிவுட்டின் காப்பியா என்ற செய்திக்கு இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

மாலை மலர்

கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ஹரஹர மஹாதேவகி’. அடல்ட் காமெடி படமாக வெளியான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதே கூட்டணி தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஹாண்ட் ஜாப் காபின்’ பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று கூறினார்கள். இதற்கு இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறும்போது, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் ஹாலிவுட் படமான ‘ஹாண்ட் ஜாப் காபின்’ படத்தின் ரீமேக் இல்லை. அந்த படத்திற்கும் இதற்கு எந்த சம்மந்தமும் இல்லை. அந்த படத்தின் சில காட்சிகளை பிடித்ததால் மட்டும் இதில் பயன் படுத்தி இருக்கிறேன்’ என்றார்.