கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் 'அருவி'. அதிதி பாலன் நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
சமீபத்தில் அருவி படத்தை பார்த்த ரஜினிகாந்த்தும் படக்குழுவை பாராட்டினார். படத்தின் இயக்குநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, அருவி படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தது. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வருவீர்கள் என்று பாராட்டியிருக்கிறார். மேலும் இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.
அதுபோல் இயக்குனர் சங்கரும் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியிருந்தார். தற்போது இயக்குனர் பாலாவும், அருவி படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அதிதி பாலன் கூறும்போது, ‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பெரிய இயக்குநரின் வாழ்த்தைப் பெற என்ன தவம் செய்தேன்.! இந்தச் சந்திப்பை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அன்பும் நன்றியும் பாலா சார்’ என்றார்.