சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார்.
`வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பாலா இயக்குகிறார். பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் இந்த படத்திற்கு வசனங்களை எழுதவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவரது இயக்கத்தில் வெளியான `குக்கூ', `ஜோக்கர்' உள்ளிட்ட படங்கள் நல்ல அழுத்தத்தை கொடுத்த நிலையில், இவர் இந்த படத்திற்கு வசனங்களை எழுதினால் அது இந்த படத்திற்கு பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.