சினிமா

வரலட்சுமியுடன் நடிக்க கஷ்டப்பட்டேன் - தனுஷ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், வரலட்சுமியின் நடிப்பை புகழ்ந்து பேசினார். #Maari2 #Dhanush

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா, வினோத், டோவினோ தாமஸ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் தனுஷ் பேசியதாவது,

வரலட்சுமியுடன் நடிக்க கஷ்டமாக இருந்தது. படத்தில் வரலட்சுமி ஒரு வசனம் சொல்கிறார் என்றால், நாம் அதற்கு பதில் யோசிப்பதற்கு முன்பே அதை சொல்லி முடித்துவிடுவார். வரலட்சுமியின் நடிப்பே வேற மாதிரி இருக்கும். அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க அவர்களுக்கு ஏற்ப நடிக்க ஆரம்பித்தேன். படப்பிடிப்பில் ரோபோ ஷங்கர், வினோத் இல்லை என்றால் அன்றையே ஷீட் போரடிக்கும்.

அவர்கள் இருவரும் இருந்தால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மாரி 2 படத்தில் நடிக்க கேட்கும் போது ரோபோ ஷங்கர் கால்ஷீட் கொடுக்க முடியாதபடி பிசியாக இருந்தார். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. #Maari2 #Dhanush