வேலையில்லா பட்டதாரி-2 பாகத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆயத்தமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 14-ந் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து ரோம், பாரீஸ் என பல நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இப்படத்தின் கதை பிரபல ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து உருவாகவிருக்கிறது.