இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் டி.ராஜேந்தர், கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையில் இருப்பவர்கள் யாரையும் பற்றி பேசாமல், படத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
அதன்பின் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘தமிழ் சினிமா தற்போது மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. ஒருபடம் 25 நாட்கள் கூட ஓடமுடியவில்லை. இந்தப் படத்தின் கதை பிடித்ததால் இதில் நடித்திருக்கிறேன். இதில் ஒரு பாடல் எழுதி, பாடி, நடனம் ஆடியிருக்கிறேன். இதுபோல், ‘கவண்’ படத்தில் நடித்தேன். இயக்குனரின் அணுகுமுறை எனக்கு பிடித்தது அதனால் அதில் நடித்து கொடுத்தேன்.
தன்ஷிகாவை கபாலி படத்தின் நாயகி என்று அழைக்கிறார்கள். ‘கபாலி’ படத்திற்கு முன்னாடியே விழித்திரு படத்தில் தன்ஷிகா நடித்திருக்கிறார்.
ரஜினி கூட நடித்ததால், டி.ஆர். பெயர் தெரியாதா, தன்ஷிகாவிற்கு மேடை நாகரிகம் தெரியவில்லை என்று டி.ஆர். பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில் குறிக்கிட்டு தன்ஷிகா மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்காமல், தொடர்ந்து தன்ஷிகாவை பற்றி பேசியதால், கண்கலங்கினார் தன்ஷிகா.