சினிமா

புதிய அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #DeepikaPadukone

தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் பலர் படங்கள் தயாரிக்கிறார்கள். நடிகைகளுக்கும் இந்த ஆசை வந்து தயாரிப்பில் இறங்க கதை கேட்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே விரைவில் தயாரிப்பாளராக மாறப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளேன். படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. சினிமா எனக்கு நிறைய கொடுத்து உள்ளது. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு காட்டுகிறார்கள். பத்மாவத் படம் வசூல், கான் நடிகர்களை மிஞ்சிவிட்டது என்று பேசினார்கள். அதற்கு காரணம் ரசிகர்கள்தான்.

அவர்களுக்கு என்னால் என்ன திருப்பி கொடுக்க முடியும்? எனக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான். எனவே நல்ல படங்கள் தயாரித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடிவு செய்துள்ளேன். வித்தியாசமான படங்களை தயாரித்து திரைக்கு கொண்டு வருவேன்.” இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

SCROLL FOR NEXT