இந்நிலையில், ‘பாகுபலி-2’ வெளியான சில நாட்களிலேயே ‘தங்கல்’ படம் சீனாவில் வெளியானது. அங்கு சுமார் 6000 திரையரங்குகளில் இப்படம் வெளியானதாக கூறப்பட்டது. ‘தங்கல்’ படத்திற்கு எதிர்பார்த்தபடியே சீனாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால், வசூலும் கணிசமாக உயரத் தொடங்கியது.
இதையடுத்து ‘பாகுபலி-2’ படத்தின் வசூலை எட்ட துரத்திக் கொண்டே வந்தது ‘தங்கல்’. தற்போது ‘பாகுபலி-2’ படத்தின் வசூல் சாதனையை ‘தங்கல்’ படம் முறியடித்துள்ளது. ‘தங்கல்’ படம் ஒட்டுமொத்தமாக ரூ.1,665 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. ‘பாகுபலி-2’ ரூ.1,633 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.