சினிமா

திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும்: நடிகர் கருத்தால் பரபரப்பு

திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய நடிகரின் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

“ நம் சமூகத்தில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களையே ஊக்குவிக்கிறோம். ஒருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. தண்ணீருக்குள் குதிப்பதற்கு முன்பு அது எப்படி என்று தெரிந்துகொள்வது நல்லது. திருமணத்துக்கு பிறகு பிரச்சினை என்பது தெரியவந்தால் என்ன செய்வார்கள்? எனவே திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாவிட்டால் அவரை அனைவரும் ஏதாவது சொல்வார்கள். அதே ஆணுக்கு பிரச்சினை என்றாலும் சிக்கல் தான். திருமண வாழ்வில் செக்ஸ் முக்கியம்.

சினிமாவில் ஹீரோ, ஹீரோயின் காதலிப்பார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும் அப்படியே இருக்காது” இவருடைய இந்த கருத்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.