சினிமா

எம்ஜிஆர் படத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘எம்.ஜி.ஆர்.’ திரைப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்திருக்கிறார்.

மாலை மலர்

இதில் செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ.ஆர்.தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர்கள் வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கான உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

'காமராஜ்' திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் துவக்க நாளன்றே, அனைத்து ஏரியாக்களும் விற்பனையாவது வழக்கம். அந்த மரபின் அடையாளமாக ஆனந்தா பிக்சர்ஸ் உரிமையாளர் சுரேஷ் ஒரு தியேட்டருக்கான விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார்.
இத்திரைப்படம், உலகெங்கிலுமுள்ள தமிழர்களை சென்றடைய எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்களுக்கு அந்தந்த பகுதி திரையரங்குகளில் திரையிட விநியோக உரிமை வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.