சினிமா செய்திகள்

ஹீரோவாக 'பிக் பாஸ்' பிரபலம் விக்கல்ஸ் விக்ரம் என்ட்ரி! .. 'லைட் வெயிட் பேபி' படப்பிடிப்பு விறுவிறுப்பு

30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் 'லைட் வெயிட் பேபி '

இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் 'லைட் வெயிட் பேபி ' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் உடன் ஆர்த்தி கிருஷ்ணா நடித்து வருகிறார்.

பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார்.

ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தின் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, மொத்த படப்பிடிப்பில் 60% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் - பிட்னெஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக இணைந்து இருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌

இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

SCROLL FOR NEXT