சினிமா செய்திகள்

யூடியூபர் இர்பான் கார் மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

இந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இர்பானுக்குச் சொந்தமான அதிநவீன சொகுசு கார் மோதியதில், பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டுபிரபல யூடியூபர் முகமது இர்பானின் கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம், தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற பத்மாவதி (55) என்ற பெண் மீது இர்பானுக்குச் சொந்தமான அதிநவீன சொகுசு கார் மோதியது. இதில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காப்பீட்டுத் தொகை

இச்சம்பவம் குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விபத்து தொடர்பான வழக்கு சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.30.69 லட்சம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காரின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பு இந்த நிவாரணத் தொகையை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT