சினிமா செய்திகள்

'யூத்' படத்தின் OTT அப்டேட்

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

அசுரன், விடுதலை 2, வாத்தி போன்ற திரைப்படங்களில் நடிகராகவும், தனுஷிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர் கென் கருணாஸ். தற்போது ‘யூத்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார்.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா அனில்குமார், சூரஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, பிரியன்ஷி யாதவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை, கல்லூரியின்போது ஏற்படும் காதல், நட்பு போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இந்நிலையில், கடந்த மாதம் வெளியான ‘யூத்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, ‘யூத்’ படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற 16-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.