சினிமா செய்திகள்

பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது -நடிகை கத்ரீனா கைப்

விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது.

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். மெரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் விக்கி கவுசலை திருமணம் செய்து கொண்ட கத்ரீனா கைப்புக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு அவரது உடல் எடை அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைரலாக பரவியது.

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கத்ரீனா கைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததுடன் உருவகேலியில் ஈடுபட்ட நெட்டிசன்களை கடுமையாக கண்டித்தும் பதிவிட்டனர். விமர்சனங்களுக்கு எந்த கருத்துக்களையும் வெளியிடாத கத்ரீனா கைப் தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் நமது சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாதிக்காதவாறு நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அனைத்தையும் நாம் பின்பற்ற முயன்றால் எந்த ஒரு விஷயத்திலும் நம்மால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது.

விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது. அதனால் நாமே நமக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருக்க வேண்டும்.

விமர்சனங்களையும், டிரோல்களையும் இலகுவாக எடுத்துக்கொண்டு நம்மை நாமே அழுத்தத்திற்குள் ஆளாகாமல் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT