நடிகர் யோகி பாபுவின் அடுத்த படமான 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' யின் பூஜை விழாவுடன் நேற்று தொடங்கப்பட்டது. கே.ஆர். செந்தில் நாதன் இயக்கியுள்ள இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம். மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து நடிகை ரச்சிதா கூறுகையில்,
"ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுப் படம் இருக்கும். அதுபோல் இந்தப் படம் இயக்குநர் செந்தில்நாதனுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அவரின் இந்தக் கனவை முழுமையாக்க படக்குழுவினர் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
பல சிரமங்கள் மற்றும் எதிர்பாராத சவால்கள் என அனைத்தையும் கடந்து, இன்றைய படப்பிடிப்பின் பூஜை விழாவை நெருங்கியுள்ளோம். இப்படம் மேலும் எந்தத் தடைகளும் இன்றி வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்.
போஸ்டரைப் பார்த்து மட்டும் நான் ஒரு 'உடற்பயிற்சி ஆசிரியர்' வேடத்தில் நடிக்கிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். நீங்கள் படத்தைப் பார்க்கும்போது என் கதாபாத்திரத்தின் உண்மையான இயல்பை அறிந்துகொள்வீர்கள்" இவ்வாறு நடிகை ரச்சிதா கூறினார்.
இப்படத்தில் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ஷிஹாப் பட்டாம்பி, படத்தொகுப்பாளர் எஸ்.பி. அகமது, கலை இயக்குநர் ரெம்பன் பல்ராஜ், சண்டைக் காட்சி அமைப்பாளர் ஜாக்கி பிரபு ஆகியோர் பணியாற்றிகின்றனர்.
பி. மஞ்சுநாத் தனது காவியா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்2 மூவிஸ் பதாகையின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். மேலும் சலேம் சரவணன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.