நமித் மல்ஹோத்ராவின் பிரம்மாண்ட படைப்பில், இந்திய திரையுலகமே வியந்து எதிர்பார்க்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது 'ராமாயணா'.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் இணைந்து, ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் ராவணன் என்ற பவர்ஃபுல் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார்.
நடிகர் யஷ்ஷின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லான இந்தத் திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டக் காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரையிடப்பட்டது.
இதனை நடிகர் யஷ் - ராதிகா பண்டித் தம்பதியின் குழந்தைகளான ஐரா (7 வயது) தனது ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடும் யதர்வ் ஆகியோர் பார்த்து ரசித்துள்ளனர்.
தன் தந்தை ராவணனாக மிரட்டியுள்ள இந்த பிரம்மாண்டக் காவியத்தை நெகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ந்த இந்தத் தருணம், அவர்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து யஷ்ஷின் குழந்தைகளின் பெயர்க் காரணமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐரா: இந்த வார்த்தை மகாலட்சுமியின் மற்றொரு பெயரான 'ஐராவதி' என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.
யதர்வ்: இதற்கு 'முழுமையானவன்' என்று பொருள்.
மேலும் யஷ் , ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களை இணைத்து 'யதர்வ்' என்ற பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த இதிகாசத் திரைப்படத்தை அவர்கள் பார்த்ததன் மூலம், ராமாயணக் காவியத்திற்கும் யஷ் குடும்பத்திற்கும் இடையே ஒரு அழகான உணர்வுப்பூர்வமான தொடர்பு உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராமரின் தம்பியான லட்சுமணனாக ரவி துபே, ராமரின் தீவிர பக்தனான அனுமானாக சன்னி தியோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வரும் நவம்பர் 5 ஆம் தேதி 'ராமாயணா' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.