சினிமா செய்திகள்

"29" படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது White Carpet Films நிறுவனம்

‘29’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘29’. படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள இந்த படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் கே.விஜயபாண்டி வருகிற மே 8-ந்தேதி வெளியிடுகிறார். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன்பு தேஜாவு மற்றும் வித்தைக்காரன் போன்ற படங்களை தயாரித்து உள்ளது. அஜித் நடித்த துணிவு படத்தை கர்நாடகாவிலும், ‘ஆர்யூ ஓகே பேபி’ படத்தை தமிழகத்திலும் விநியோகம் செய்துள்ளது.

இதற்கிடையே ‘29’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி, ‘29’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது.

இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.