மலேசியாவை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் டத்துக் மாலிக் இது குறித்து ரஜினியுடன் பேசியுள்ளார். ஆனால் ரஜினிக்கு மலேசியாவில் இசை வெளியீட்டை நடத்த விருப்பமில்லை என கூறப்படுகிறது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜெயிலர் 2’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன், வித்யாபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 15-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது நடைபெற இருக்கிறது? என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மலேசியாவில் படத்தின் இசையை வெளியிடலாம் என தயாரிப்பாளர் தரப்பில் திட்டமிடப்பட்டு இருந்தது. மலேசியாவை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் டத்துக் மாலிக் இது குறித்து ரஜினியுடன் பேசியுள்ளார். ஆனால் ரஜினிக்கு மலேசியாவில் இசை வெளியீட்டை நடத்த விருப்பமில்லை என கூறப்படுகிறது.
ஜனநாயகன் இசை வெளியீடு மலேசியாவில் நடைபெற்றதால் விஜய்யுடன் போட்டி போடுகிறார் என விமர்சனங்கள் வெளியாகும். இதனால் மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என ரஜினி மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ இசை வெளியீட்டை சென்னை அல்லது துபாயில் நடத்தலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.