இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படத்திற்கு பரிமளா அண்ட் கோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி, சிங்கம்புலி ஆகியோர் நடிக்கின்றனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், ஜி.கே.தமிழ்க்குமரன் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘வாட்சா உடாதா’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.