இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் "ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு" என்ற தலைப்பில் வெளியாகிறது. பூரி ஜெகன்னாத் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா துனியா விஜய் குமார், ஜரீனா வஹாப், விடிவி கணேஷ் மற்றும் பிரம்மாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அனிமல் படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரின் கீழ், ஜேபி நாராயண ராவ் இப்படத்தை தயாரித்துள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில், ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "ஸ்லம் டாக்:33 டெம்பிள் ரோடு" படத்தின் டீசர் இசை மிகவும் அழகாக இருந்தது. பொதுவாக இசையமைப்பாளர் என்றாலே பணி தாமதமாகும் என்ற டிரெண்ட் உள்ளது.
கடைசியில்தான் இசை கிடைக்கும், அதற்காக காத்திருக்க வேண்டும் என்ற ஒரு ட்ரெண்ட் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் இல்லாமல் அழகாக இசையமைத்துக் கொடுத்ததில் ரொம்ப சந்தோஷம்," என்றார்.