யூடியூப் தளத்தில் தனது 'VJ Siddhu Vlogs' மற்றும் குறும்புத்தனமான ஸ்ட்ரீட் ஆங்கரிங் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த VJ சித்து, இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் 'டயங்கரம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வெல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். தற்பொழுது வெளியாகியுள்ள இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மற்றும் டீசர், ஒரு பக்காவான கமர்ஷியல் எண்டர்டெய்னர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடனும் கலர்புல்லாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் VJ சித்துவுடன் இணைந்து நட்டி (நடராஜ்), நிதின் சத்யா, 'வாட்ஸ்அப்' மணி, ஹர்ஷத் கான், இளவரசு, காளி வெங்கட் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
டீசரில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள், இது ஒரு நண்பர்கள் கூட்டத்தின் 'சம்பவம்' நிறைந்த காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த கலாட்டாவாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ போஸ்டரின் மூலம் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி உரிமத்தை முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
படத்தின் ஆடியோ உரிமத்தை 'வெல்ஸ் மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது.
ஒரு அறிமுக இயக்குநரின் படம் என்றாலும், தமிழ் சினிமாவின் டாப் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் கைகோர்த்துள்ளனர். 'ஜோசப்', 'பேச்சிலர்' போன்ற படங்களுக்கு இசையமைத்த சித்து குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாந்துள்ளார். முன்னணி எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். VJ சித்துவின் நெருங்கிய நண்பரான 'டூட் விக்கி' கிரியேட்டிவ் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
டிஜிட்டல் திரையில் கொடிகட்டிப் பறந்த VJS கேங், தற்போது வெள்ளித்திரையில் 'டயங்காரம்' படத்தின் மூலம் தங்களது அலப்பறையைத் தொடங்கவுள்ளதால், ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.