டயங்கரம்
சினிமா செய்திகள்

டயங்கரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு: கிளிம்ப்ஸ் வெளியிட்ட படக்குழு

விஜே சித்துவின் டயங்கரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து இயக்கி நாயகனாக நடித்துள்ள புதிய படம் "டயங்கரம்". வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதி சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகிய "டயங்கரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

சித்து குமார் இசையமைக்கும் இந்த படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. தயாரிப்புக்குழு முன்னதாக ஜூன் மாதம் படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது. பின்னர் இந்த மாதம் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்திருந்தது. தற்போது ஜூலை மாதம் இறுதி நாள்தான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால், அடுத்த மாதம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.