சினிமா செய்திகள்

ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... ஓடிடி வெளியீடு எப்போது?

செப்.14ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வெளியான 25 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

மேலும் படம் செப்.14ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT