சினிமா செய்திகள்

Suriya 46 | ஷூட்டராக களமிறங்கிய சூர்யா - லைக்ஸ்-ஐ குவிக்கும் விஸ்வநாத் & சன்ஸ் டீசர்

மாலை மலர்

ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமாக உருவாகி வரும் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

2005-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. டீஸரின் படி நடிகர் சூர்யா துப்பாக்கி சுடும் வீரராக நடித்திருப்பது தெரியவந்துள்ளது. காதல், காமெடி கலந்த திரைப்படமாக "விஸ்வநாத் & சன்ஸ்" உருவாகி இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.