தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான ‘கருப்பு’ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இதனை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பாக படத்தின் பாடல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் படத்தின் முதல் பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்த பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா வருகிற 23-ந்தேதி தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘விஸ்வநாதன் அண் சன்ஸ்’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.