சினிமா செய்திகள்

ஓர் மாம்பழ சீசனில்... 'பேச்சுலர்' பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியானது. இப்படத்தை 'பேச்சுலர்' பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்தோ, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ தகவல் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன்தாஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.