சினிமா செய்திகள்

‘நாச்சிந்தி மச்சானே’ - விஷாலின் ‘மகுடம்’ படத்தின் பாடல் வெளியானது!

மகுடம் திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஷால் இயக்கி, அவரே மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் மகுடம். இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மகுடம் திரைப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான குத்துப் பாடல் "நாச்சிந்தி மச்சானே" இன்று மாலை 7 மணிக்கு வெளியாகயுள்ளது.

மங்லி மற்றும் வேல்முருகன் பாடியுள்ள இப்பாடல், ரசிகர்களை தியேட்டரில் நடனமாட வைக்கும் ஒரு எனர்ஜடிக் கொண்டாட்டப் பாடலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.