நடிகர் விஷால் தானே திரைக்கதை எழுதி, இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மகுடம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "நச்சிந்தி மச்சானே" இன்று மாலை 7 மணிக்கு வெளியானது.
தமிழ் சினிமாவின் கிராமியப் பாடல்களின் அடையாளமான வேல்முருகன் மற்றும் பாடகி மங்லியும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களின் காம்போ பாடலின் விறுவிறுப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.
வண்ணமயமான திருவிழா பின்னணியில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான பாடலுக்குப் பிரபல நடன இயக்குநர்களான பிருந்தா, தினேஷ், அசார், மற்றும் அப்சர் ஆகியோர் இணைந்து நடன பயிற்சி அளித்துள்ளனர்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்பாடலில் விஷாலுடன் இணைந்து நடிகை அஞ்சலி நடித்துள்ளார். துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்தில், கிராமிய பின்னணி கொண்ட அதிரடிப் பாடலாக உள்ளது.
திரையரங்குகளில் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.