சினிமா செய்திகள்

செல்லப் பூனையுடன் ரெட் லைட் தெரபி எடுத்துக்கொண்ட சமந்தா.. வைரல் வீடியோ

தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறாதனது பூனையுடன் சமந்தா ரெட் லைட் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வரும் சமந்தா கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் தனது மருத்துவ ஆலோசகருடன் உடல் சார்த்த பல்வேறு விஷயங்களைக் குறித்து உரையாடல் நடத்தி அதை பாட்காஷ்டாக வெளியிட்டு வருகிறார். அந்த பாட்காஷ்டில் சொல்லப்படும் மருத்துவ குறிப்புக்கள்  தவறானவை என்று சமீபத்தில் சர்ச்சையும் எழுந்து அடங்கியது.

இந்நிலையில் சருமத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தனது மயோசிடிஸ் நோயை குணப்படுத்த வெளிநாடுகளில் பல்வேறு தெரபிகளை எடுத்து வரும் சமந்தா, தற்போது ரெட் லைட் தெரபி சிகிச்சை பெற்றுள்ளார். இந்த தெரபி மூலம் சருமத்தில் உள்ள திசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த தெரபியை தனது பூனையுடன் சேர்ந்து சமந்தா எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து 'ரெட் லைட் தெரபி டேட் ' என தனது பூனையுடன் சென்ற டேட்டிங் என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளார். 

SCROLL FOR NEXT