சினிமா செய்திகள்

7 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் விமலின் ‘சண்டக்காரி’!

சுமார் 7 ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு செப்.18ம் தேதி படம் வெளியாகிறது.

விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் உருவாகி உள்ள சண்டக்காரி திரைப்படம் செப்.18ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உருவான இப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.

‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் பிஸ்னஸ் மேன் படத்தை தழுவி, இயக்குநர் ஆர். மாதேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் கண்டிப்பான பெண் அதிகாரிக்கும் (ஸ்ரேயா), அவருக்குக் கீழ் வேலை செய்யும் விமலுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல், மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகி உள்ளது.

விமல், ஸ்ரேயாவுடன் இணைந்து சத்யன், பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT