சினிமா செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' - கவனம் ஈர்த்த டைட்டில் டீசர்

நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளதுஇந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்

நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது. படத்தின் டைட்டிலில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்படுகிறது. இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் வீர தீர் சூரன் என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான போஸ்டரை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனிடையே விக்ரம் படத்திற்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.