சினிமா செய்திகள்

விக்ரமின் 'சியான் 63' படப்பிடிப்பு துவக்கம்!

இப்படத்தின் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் ரியா ஷிபு.

‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் தனது 63-வது படத்தில் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் ரியா ஷிபு. இவரைத் தவிர ஊர்வசி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் கலந்த ஒரு தனித்துவமான மற்றும் மாறுபட்ட பாணியிலான திரைப்படமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்காக விக்ரம் கட்டுமஸ்தான உடலை தயார் செய்ய கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்த சூழலில் ‘சியான் 63’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன், தங்கலான் ஆகியவை விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதால் சியான் 63 ஐ விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.