அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது.
அதன்படி துருவ் விக்ரம்
நடிக்கும் நான்காம் படமான இதற்கு "ஜாக்கி" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே துருவ் விக்ரம் உடைய தந்தையும் முன்னணி நடிகருமான 'சியான்' விக்ரம் நடிக்கும் 63வது படத்தின் டைட்டில் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அறிவிக்கப்பட உள்ளது.
‘வீர தீர சூரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தை ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
மலையாளத்தில் 'சர்வம் மாயா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரியா ஷிபு, இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே மற்றும் ஷம்மி திலகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.