சினிமா செய்திகள்

ஜெட்லி படத்தை ரீமேக் செய்யும் விஜயகாந்த் மகன்

என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் என் தந்தை என விஜயபிரபாகரன் உருக்கம்.காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்.

மாலை மலர்

ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்.

ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.