சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக்’ டீசர் வெளியீடு!

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.

பூரி ஜெகன்னாத் எழுத்து மற்றும் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான, ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் தபு, சம்யுக்தா துனியா விஜய் குமார், ஜரீனா வஹாப், விடிவி கணேஷ் மற்றும் பிரம்மாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அனிமல் படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரின் கீழ், ஜேபி நாராயண ராவ் இப்படத்தை தயாரிக்கிறார்.

தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.