பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. பட்டிமன்றத்தை வீடு வீடாக கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாக பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது சொற்கள் வழி வழியாக தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.