சினிமா செய்திகள்

விவாகரத்து வழக்கு தொடர்ந்த சங்கீதா... Worth-ஏ இல்ல என பேசிய #Vijay - சனம் செட்டி விமர்சனம்

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன் என்று சங்கீதா குற்றச்சாட்டுஹர்ட் ஆகாதீர்கள், இது அந்த அளவிற்கு WORTH இல்லை என்று விஜய் பேசினார்.

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

இந்த நிலையில், தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதி மறுப்பதால் சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும். விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தனக்கு சரிபாதி உரிமை உள்ளது. நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரினால் வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பு மிரட்டுகின்றனர்.

படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும். பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிகிறார் என்று சங்கீதா கூறியுள்ளார்.

சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு குறித்து தவெக மகளிர் தின விழா கொண்ட்டாட்டத்தில் பேசிய விஜய், "சமீபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் போராடி, ஹர்ட் (hurt) ஆவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா. ஹர்ட் ஆகாதீர்கள், இது அந்த அளவிற்கு WORTH இல்லை" என்றார்.

விஜயின் இந்த பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகிகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், விஜயின் இந்த பேச்சை நடிகை சனம் செட்டி விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், என்னது?? WORTH ஏ இல்லியா ??? இதற்கு பெண்கள் கைதட்டி உற்சாகம் அடைகின்றனர்" என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக விஜயை ஆதரித்து வீடியோ வெளியிட்டு வந்த சனம் செட்டி, திருமண விழாவில் திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்த வீடியோவை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO! This is not the way ❌Grief of the wife cannot be ignored like this! As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM