சினிமா செய்திகள்

VIDEO: விஜய்க்கு சவால் விட்ட பிக்பாஸ் ஜூலிக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலடி

விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை விமர்சித்தனர்.விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார். விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்தனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்" என்று கிண்டலாக பேசியுள்ளார்.

இந்நிலையில், விஜய்க்கு சவால் விட்ட பிக்பாஸ் ஜூலிக்கு நடிகை சனம் ஷெட்டி பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "ஒவ்வொரு முறையும் விஜய் பேசினால் என்ன ஒரு பயம் ஏற்படுகிறது. விஜய் இப்படி பேசுகிறார். அவரின் ரசிகர்கள் இப்படி செய்வார்கள். இதனால உயிர்கள் போயிரும்ன்னு நடக்காத ஒன்றை இவர்களே சீன்களை உருவாக்கி மக்களை தூண்டி விட்டு ஒரு அஜென்டா செட் செய்து இப்படி பண்ணுவது நியாயமா?

ஜூலி உங்க மேல இருக்கும் அக்கறையில் ஒரு விஷயம் சொல்றேன் என கூறி தன்னுடைய டிசர்ட்டில் இடம் பெற்றிருந்த "Be Yourself" என்ற வார்த்தையை காட்டினார்.

யாரோ எப்பவோ பிக்பாஸில் போய் ட்ரெண்ட் செட் செய்தார்கள். நாமும் அப்படியே செய்யலாம் என அவர்கள் பண்ணியதை நீங்கள் பண்ணினால் இதோ இப்படித்தான் நடக்கும்.

அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார். குட்டி கதை கூறுகிறார். தமிழ்நாடு அரசியல் அடங்காத ஒரு காளை மாடு மாதிரி. அனுபவம் இல்லாத ஒரு புது கட்சியாக நாங்க வந்திருக்கிறோம். அனுபவத்தை பார்க்க வேண்டாம். நோக்கத்தைப் பாருங்கள் என பேசினார். மக்கள் பிரச்னை என்ன என்பது எங்களுக்கு புரியும். உங்களுக்காக நாங்க நிறைய செய்வோம். நம்பி ஓட்டு போடுங்க என்று தானே கூறுகிறார். இதில் தவறாக புரிந்து கொள்வதற்கான இடமே இல்லையே.

உண்மையிலே விஜய் பேச்சைக் கேட்டு சின்ன பசங்க தப்பு பண்ணி விடக்கூடாதுன்னு அக்கறையில் பேசுகிறீர்கள் என பார்த்தால் அதுவும் இல்லை. முதல் வீடியோ விஜயை தாக்கியும் இரண்டாவது வீடியோ தனி மனித தாக்குதல் என்பதும் தெளிவாக தெரிகிறது. சட்டப்படி தனி மனித தாக்குதல் என்பது தவறு. அது உங்களுக்கு நடந்தாலும் நான் கண்டிப்பேன்" என்று சனம் ஷெட்டி பேசியுள்ளார்.

Thalapathi is not a soft target & TVK is not a punchbag !! @iMariaJuliana iv been your genuine well wisher over the years so this comes from a place of concern...Speak but please think before you speak ! How can you personally attack others when you yourself were a victim of… pic.twitter.com/gcVGFeRGJ0