சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணியில் "ரணபாலி" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இத்திரைப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்'ஆகிய திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் சிறந்த ஜோடியாகக் கொண்டாடப்பட்டவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

நிஜ வாழ்க்கையில் தம்பதிகளான இவர்கள், திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணைந்து நடிக்கும் பீரியட் ஆக்ஷன் திரைப்படமான "ரணபாலி" குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

1870-களின் பின்னணியில் ஒரு வரலாற்றுப் போர்!

இத்திரைப்படம் 19ஆம் நூற்றாண்டின், குறிப்பாக 1870-களின் பின்னணியில், பிரிட்டிஷ் இந்தியாவின் அடக்குமுறை மற்றும் பெரும் பஞ்சத்தின் காலத்தை மையமாகக் கொண்டு களமிறங்குகிறது. தனது நிலத்தையும் மக்களையும் காப்பதற்காக பிரிட்டிஷ் கமிஷனரை எதிர்த்துப் போராடும் ஒரு கிளர்ச்சிப் போராளியின் கதையாக இது உருவாகியுள்ளது.

இப்படத்தில் கம்பீரமான தோற்றத்தில், கட்டுமஸ்தான உடலமைப்புடன் ஆக்ரோஷமான கிராமத்து போர்வீரனாக 'ரணபாலி' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக 'ஜெயம்மா' என்ற பவர்ஃபுல்லான பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

தொழில் நுட்பக்குழு

ராகுல் சாங்கிருத்தியன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி - ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

ரிலீஸ் தேதி

இத்திரைப்படம் முதலில் செப்டம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தற்போது வரும் அக்டோபர் 16ஆம் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதை திரைபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

"ரணபாலி" திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் பான்-இந்தியா திரைப்படமாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்தையா சாமி

இத்திரைப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ரொமாண்டிக் மெலடி மற்றும் மாஸ் கலந்த ஸ்பெஷல் ப்ரோமோ சாங் "எந்தையா சாமி" பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது.

இந்த பாடலின் வரிகளை பிரபல பாடலாசிரியர் விவேகா வரிகளில், கார்த்திக் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் அஜய் கோகாவாலே ஆகியோர் பாடியுள்ளனர்.