சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் Lawyer படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

மார்கன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கிறார்.இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

மாலை மலர்

மார்கன் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் டைட்டிலை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட்டை படக்குழு வீடியோ எடுத்து வெளியீட்டுள்ளது. படத்தில் இந்தி நடிகையான ரவீனா டாண்டன் இணைந்துள்ளார். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.