சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் "மழை பிடிக்காத மனிதன்" டீசர் அப்டேட் வெளியீடு

இந்த படம் விஜய்மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் மே 29 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்பான இதர அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

SCROLL FOR NEXT