இயக்குநர் வெற்றிமாறன் 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விடுதலை 2 படத்தில் இடம்பெற்றுள்ள 'தினம் தினமும்' பாடல் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
The first single #DhinamDhinamum from #ViduthalaiPart2 is out now.https://t.co/F8fVpOAEDUDirected by #VetriMaaran#ViduthalaiPart2FromDec20@VijaySethuOffl @sooriofficial @Ananyabhat14 @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72… pic.twitter.com/0E1n0l4ZAR